Friday, August 7, 2009

அயல் நாட்டு அகதிகள்


டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க
முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்


பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல்
Happy newyear, Happy pongal, என்று மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும்
கைய்யாலாகாதவர்கள்


இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் காதலியை நெஞ்சுருக
கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை
கனிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு
எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது


தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று சொல்லும்
default குரலுக்கு சொந்தக்காரர்கள்


உணவில் குறையிருந்தாலும் உடல் நலக்குறைவிருந்தாலும்
first class என்று சொல்லியே பலகிப்போனவர்கள்
வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன்
வாசனை பூச்சு வாங்க மறப்பதில்லை
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க


கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
கலைத்துதான் போகிறோம்.


எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்


திறைக்கடலோடி திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்


எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை
உனக்கென்ன!

விமான பயணம் வெளி நாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர் வாசிகள் விடும் பெறுமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது!


ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம்
எங்களுகே தெறியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கிம்றோம்!இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே
நரைக்கவும் துவங்கியது.


நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை!வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்டைஈடு கிடைக்காத நஷ்டம் இது
யாருக்காக!எதற்க்காக!! ஏன்!!!


தந்தையின் கடன்,தங்கையின் திருமணம் தம்பியின் படிப்பு
சொந்தமாய் வீடு,குழந்தையின் எதிர்காலம்,குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல் கண் முன்னே.

Tuesday, July 21, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது


இப்போது வலையுலகில் சுவாரஸ்யமாய் ஓடிக் கொண்டிருக்கும் சுவாரஸ்ய வலைபதிவர் விருது வைபவத்தில் என்னையும் கூட சேர்த்து விட்டிருக்கிறார்
பதிவர் ஷஃபி அவர்கள். நன்றி ஷஃபி அண்ணா.இன்னும் ஆறு பேருக்கு இந்த விருதை கொடுக்கணுமாம் நான் ரசித்து படித்த பிளாக்ல அவார்ட் எல்லாருக்கும் கொடுத்துட்டாங்க இருந்தாலும் மீண்டும் குறிப்பிடுகிறேன்.
1.கற்போம் வாருங்கள் (ஜமால்).
2.மன விலாசம் ( நவாஸ்).
3.என் உயிரே (அபு).
4.மழைக்கு ஒதுங்கியவை (அ.மு.செய்யது).
5.வீட்டுபுறா (சக்தி).
6.வானம் உன் வசப்படும் (புதியவன்).
ஆறுபேர் என்ப‌தால் ம‌ட்டுமே ப‌ட்டிய‌ல் இத்துட‌ன் நிறுத்த‌ப்ப‌டுகிற‌து. ஏனென்றால் சுவார‌ஸ்ய‌ ப‌திவ‌ர்க‌ள் நிறைய‌ பேர் உள்ள‌ன‌ர். அத்த‌னை பேருக்கும் என் பணிவான‌ வாழ்த்துக்க‌ள்

Tuesday, June 9, 2009

காவியம்


விரல்
தீண்டும் முன்பே;
நகம்
சொல்லி சென்றதடா;
உன் எண்ணங்களை
காயங்களாய்.

Saturday, June 6, 2009

சுவாசம்


என்னவனே;
என்னுள் நிறைந்தவனே காலங்கள் கடந்தாலும்
உன்னோடு நான் கொண்ட காதல் அப்படியே


எனக்குள் மட்டும் ஏன் இந்த தடுமாற்றம்;
சொல்ல வந்த வார்த்தைகளை
சொல்லாமல் தவிக்கிறேன்,


காலம் கணிந்தாலும்
கண்மூடி விழிக்கிறேன்,
ஏன் தெறியுமா?
என் காதலை உன்னிடம் சொல்லிய பிறகு
நீ மறுத்துவிடுவாயோ!

உன் சுவாசத்தை கேட்டுப்பார்;
அது சொல்லும்; உன்மீது நான் கொண்ட காதலை,
உன்னோடு நான் கொண்ட பந்தம்;
மண்ணோடு மழைக்கொண்ட சொந்தம்,

என்னவனே எனக்கு நானே
ஆறுதல் கூறிக் கொண்டேன்
சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

Saturday, May 23, 2009

என்னைப்பற்றி


என் உயிரே... அபு...


அபுவின் நீண்ட நாள் சிறிய குழப்பம் இன்று தெளிவாகிவிடும் என்று நினைக்கிறேன்.
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் பெயர் நிஷா.இது என்னாங்க கேள்வி அப்போதைக்கு பெற்றோர் வைக்குற பெயர்தான்.எனக்கு என் பெயர் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பகல் வெங்காயம் கட் பன்னும்போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களுடைய முகம்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,பிடிக்காதது என் பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
இது என்னங்க கேள்வி நாணயம்னு சொன்னா பூவும் தலையும் இருக்கனும்,குடும்பம்னா கணவன் மனைவி பக்கத்தில் இருந்தால்தான் அழகு.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீல நிற சுடிதார்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மானிட்டரை பார்த்து டைப் பண்ணி கொண்டு, லட்சம் கனவுகள்(modthi vilayaadu)பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீல வர்ணமாக ஆசை.

14.பிடித்த மணம்?
மல்லிகை மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
1.இவர் ஒரு கவிஞன்.கவிதை மட்டுமே இவரின் உலகம்.இவரின் கவிதை அனைத்துமே அருமை.
2.இவரின் அனைத்து பதிவுகளும் எனக்கு பிடிக்கும்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அபுஅஃப்ஸர்... என் உயிரே...
இவரோட ஒவ்வொரு கவிதையிலும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உறவுகளை தேடும் விதம் அழகு.இவரின் படைப்பில் நான் ரசித்த என் மதிப்பிற்குறிய வழிகாட்டி இந்த தலைப்பின் அனைத்து வரிகளும் அவரின் கண்ணீர் துளிகல்.
சக்கரை_சுரேஷ்:
இவர பற்றி சொல்லனும்னா ரொம்ப நல்லவர் வல்லவர் சொல்லிகிட்டே போகலாம் ஆனால் இவர் அரசியலுக்கு போக வேண்டியவர்.

17. பிடித்த விளையாட்டு?
வீடியோ கேம்ஸ்

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நான் ரசித்த படம் சந்தோஷ் சுப்ரமணியம்.காதல் திரைபடம் காமெடி படம்.


20.கடைசியாகப் பார்த்த படம்?

அருந்ததி

21.பிடித்த பருவ காலம் எது?

பனிக்காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

குர்ஆன் (தர்ஜமா),அமல்களின் சிறப்புகள்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கணவனின் புகைப்படம் புதிதாக வரும்பொழுது (வாரம் ஒருமுறை).

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

என் கணவனுக்காக என் மொபைலில் இருந்துவரும் ரிங்டோன் முன்பே வா பாடல்(சில்லுனு ஒரு காதல்).

பிடிக்காத சத்தம்:இடியின் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

துபாய், மலேசியா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

மருதாணி விடுவேன்,சேலை டிசைனிங் பன்னுவேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வட்டி,புறம் பேசுவது,திருட்டு.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

டென்ஷன்,டென்ஷன்,டென்ஷன்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இந்தியாவில் மைசூர் பிருந்தாவனம்,ஊட்டி மலர்கண்காட்சி.வெளிநாடு துபாய் ஜுமைரா கடற்கரை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

கவலை ஒரு வியாதி அதனால் கவலை இல்லாம சந்தோஷமா இருக்கனும்.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இதுவரை இல்லை,இனியும் இல்லவே இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.

ஓவரா கலாய்க்காதீங்கப்பா

இதே கேள்விகளுக்கு தங்களுடைய பதிலை சொல்வதற்கு

1.புதியவன்.
2.பூர்ணி






Friday, May 22, 2009

உன்னை நினைத்து


விழி மூடி உறங்கச் சென்றால்
என் இதயவாசலில்
எனக்குள் உன் எண்ணங்கள் பிறக்கின்றன;
உனைக்கண்டு திகைக்கின்றேன்
எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்;
ஏன்! தெறியுமா நான் பைத்தியக்காரியாம்
ஆம் அவர்களுக்கு என்ன தெறியும்
நான் உன்மீது கொண்டுள்ள காதல்,

சுகமான நினைவுகளோடு
சுமக்கிறேன் உன்னை;
ஏன்! இதயம் துடிக்க மறந்தாலும்
சில மணித்துளி நினைவுகள் நிலைத்திருக்கும்

ஆனால் நான் உன்னை
நேசிப்பதை நிறுத்திவிட்டால்
என் உயிரே இருக்காது
உன்மீது நான் கொண்டுள்ள காதல் உலகமறியாது;
அறிந்தாலும் அதற்கு புரியாது
ஏன் என்றால் அவர்கள் பார்வையில்
நான் பைத்தியக்காரி.

Saturday, May 16, 2009

அல்லாஹுஅக்பர்

பூமியின் எந்தப் பகுதியின் மீது தொழுகையின் மூலம்,அல்லாஹ்வை நினைவு கூரப்படுகிறதோ, அது பூமியின் மற்ற பகுதிகளிடம் பெருமை பேசுகிறது.




































MASHA ALLAH

நூல்:அமல்களின் சிறப்புகள்.














Thursday, April 30, 2009

ஹைக்கூ



நட்பு
உயிர்போகும் நேரத்திலும்
அவள் முகம் பார்த்து
உயிர் பிரிய வேண்டும்
என்று நினைக்கும் உறவு காதல்.
உயிர் போகும் போதும்
உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு.



பார்வை
கருவறையில் நான் இருந்தவரை
வெளிச்சத்தை கண்டதில்லை.
பிறந்த பின்பும் நான் கருவறையில்தான் வாழ்கிறேன்.
நினைவு
நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்
நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்

பூக்கள்
பூக்களுக்கு ஒரு நாள்தான் ஆயுள்
ஆனால் அதையும் பரித்து
பூஜை செய்கிறான் மனிதன்
நூறு வருட ஆயுள் வேண்டி.
மெளனம்
ஒரு மனிதனை தாக்கு மிகப்பெரிய ஆயுதம்
அவனுக்கு பிடித்த ஒரு உறவின் மெளனம்

Saturday, April 25, 2009

தொடரும்


தெளிந்த நீரோடைதனில் தெரித்த பனித்துளியாய்
கண்கள் உனைக் கண்ட முதல்
அமைதி கடல்தனிலே அலைபோல நீயும் வந்தாய்;

உருவம் இல்லா உறவு இது
உன்னாலே உருவானது
திசையறியா பறவை
நான் கானும் திசையெல்லாம்
நீயாகி வந்து நின்றாய்;
கேள்வியோடு நின்றவன் நான்
பதிலை தந்தவள் நீ

காடு மலை பாராத காட்டாற்று வெள்ளமாய்
தடைகல் பல தாண்டி வந்தோம்
கல்வி நம்மை சேர்த்தது
கல்லூரி நம்மை பிரித்தது;

மங்கையான உன்னை
மனைவியாக வேண்டி யாசித்தேன்;
இரு மனதுடன் நீ யோசித்தாய்
காயங்களை எனக்குள் தந்துவிட்டு
அதற்க்கு மருந்தை சொல்லாமல் மலுப்பிவிட்டாய்

வலி பொறுக்க முடியாமல்
வஞ்சி உனைக்; கெஞ்சி நின்றேன்;
வாசற்படி வந்த என்னை
காசுக்கொடுத்து அனுப்ப சொன்னாய்

உணவுக்காக வந்தவன் இல்லை
உன் உறவுக்காக வந்தவன்
யாசிக்க வந்தவன் இல்லை
உன்னை நேசிக்க வந்தவன்

கனவுகளை நிஜமாக்கி
கற்பனைகளை விற்று
கவிதை வாங்குகிறேன்
உனக்காக பிறந்த வரிகள்
உன்னால் மட்டுமே வாழ்கிறது;
எழுத்துரிமை கொடுத்துவிட்டு
பதிப்புரிமை மறுத்ததேனோ

கடலில் விழுந்த எனக்கு
கட்டுமரம் தந்தாய்
வழி அறியாமல் விழிக்குறேன்
மீண்டும் திசை காட்ட மாட்டாயோ
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னை என்னி மட்டுமே வாழ்ந்திருப்பேன்.

Tuesday, April 21, 2009

எங்கே நீ


உன் நினைவுகளால்...
நிஜங்களை நினைத்து
நிலைமாறி தவிக்கிறேன்.

அணை இல்லா நெஞ்சத்தில்
ஆசைகள் எத்தனையோ!
துணையாக வந்துவிட
துணிந்து நின்றேன் உன்னோடு

கனவில் வந்தது போல்
என்னை கண்மூடி
உறங்கச்சொன்னாய்.

பெற்றவலுக்குத்தான் தெறியும்
பிள்ளையின் பாசம்.
கருக்கலைப்பு செய்துவிட்டு
பிள்ளை வரம் கேட்கிறாய்

காகிதத்தை கிழித்துவிட்டு
கவிதை வரிகள் கேட்கிறாய்.
விடை தெறியா வினாக்களுடன்
உனக்கே!உனக்காக!!

Thursday, April 16, 2009

கனவு


அலை அலையாய்
அத்தனையும் மலைபோல
உன்னிடத்தில்

வெண்ணிலவும்தான் மயங்கும்
பெண்ணவளின் கண்ணழகு;
கார்மேகம் என நினைத்து
மயில்கள் இங்கே
தோகை விரிக்கும்


பெண்ணே உன்
கருங்கூந்தல் அழகாலே!
புள்ளிமானும் துள்ளி வந்து
நடைபயிலும் உன்னிடத்தில்
எத்தனையோ!அத்தனையும்!
மொத்தமென உன்னிடத்தில்;

சித்திரமே உன் அழகு
சத்தியமே உன் சொல்லழகு
நித்திரையில் நீ இருந்தால்
அந்த நிஷப்தமும் ஓர் பேரழகு


சித்திரமாய் சிற்பி எந்தன்
கண்களிலே சரணடைந்தாய்
சிற்பமாய் வடிக்க என்னி
கரும்பாறை உடைத்தெறிந்தேன்


சித்திர கன்னி அவள்
சிறகடித்து பறக்க என்னி
நித்திரையில் இருந்த என்னை
இரக்கமின்றி விழிக்கச்செய்தாள்


நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?

Tuesday, April 7, 2009

கோபம் ஏன் தோழியே


நீ இங்கு நானாக


நான் இங்கு நீயாக


நிஜங்களை நினைத்து


நினைவுகளை வளர்த்தோம்.



ஒவ்வொரு க‌ண‌மும்


ஒவ்வொரு நிக‌ழ்வு;


ப‌சித்த‌ பொழுதெல்லாம் _புசிக்க‌ச்செய்தாய்



ப‌டிக்கும் நேர‌த்தில் _பாட‌ம் சொன்னாய்


நான் நிழ‌லாய் வ‌ந்த‌ பொழுது


என‌க்கு நிஜ‌மாய் நின்றாய்!


நேசிக்க தெறிந்தவள்


யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்


பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?


என்னுயிர் நட்பு மலரே!


நாம் மணம் வீசவேண்டும்


நீ மனம் மலர மாட்டாயோ...

Thursday, April 2, 2009

என்னவன் டையிரியிலிருந்து


நீ காற்று_நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்_ஆம்
உனக்கு பிடித்த வரிகள்;
நீ என்னிடம் அடிக்கடி சொல்லிய வரிகள்;
தென்றலாய் இருந்த என்னை சூறாவளியாய் சுற்ற வைத்தாய்
கடல் அலை நான் என்றேன்
கடற்கறை நீ என்றாய்
என் நினைவுகளும் நிஜங்களும் நீ என்றேன்
உன் நெஞ்சத்தின் நினைவுகல்
தடம் மாறி போனது ஏனோ?
என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
ஏனோ ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்கிறேன்
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே;
இப்படி எவ்வளவோ எனக்காக நீ சொன்னாய்
அத்தனையும் சுமந்தேன்_இறுதியில்
நீ என்னிடம் வந்து சொன்ன ஒரு செய்தி
அதை கேட்ட நான் அதிர்ந்தேன்_ஆம்
நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்
சம்மதம் சொல்லவா_என்ன இது
ஒரு உயிரை பலி கொடுக்கும் முன்
அதனிடம் உன் உயிரை எடிக்கவா என்று
கேட்பதுபோல் அல்லவா உள்ளது
என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்
ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
மணலில் எழுதிய வார்த்தைகள்
அலையின் பாசத்தால் அழிந்து போனதோ
விளையில்லா என் பாசத்தை
விற்பனை செய்து விட்டாய்
தலைமகன் தனியே;கலைமகள் எங்கே நீ?




Monday, March 30, 2009

படித்ததில் பிடித்தது

புவனாவை நினைத்து, ரவி கடுப்பானான்.
புவனா பேசியது அப்படி.
ஜாஸ்மின் செண்ட் பிடிக்குமில்ல..!இந்தா....ரவி ஆரம்பித்தான்.
ப்ச்.தலைவலிக்கும்ங்க. திருப்பிக் கொடுத்திடுங்க‌
பர்மா பஜார்ல ஷிபான் சாரி வாங்கினேன்...
ஜெயச்சந்திரன், சரவணாஸ் போனா, இந்த விலைக்கு, 10 சாரி வாங்கிடலாம், வேணாம்ங்க...
மாயாஜால்ல... இரண்டு டிக்கெட் புக் பண்ணிட்டேன்.போலாமா....
ச்சே..20 ரூபாய்க்கே,டி.வி.டி கிடைக்குதுல்ல‌...!300ரூபாய் வேஸ்ட்டா..
ர‌விக்கு தாங்காம‌ல் வெடித்தான்
ஏண்டி நொய் நொய்ங்க‌ற‌...காத‌லிச்சுதானே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்ட‌...!இப்ப‌ என்ன‌டி வ‌ந்துச்சு...?
புவ‌னா சிரித்தாள்.
என் அந்நாள் காத‌ல‌ரே..!க‌ல்யாண‌மாகி 20 வ‌ருஷ‌மாச்சு; வேல‌ண்டைன்ஸ் டே, ஆட்ட‌மெல்லாம் போதும். 18 வ‌ய‌சில‌, ஒரு பொண்ணும், இப்ப‌ நம‌க்கிருக்கா..!ஏதாவ‌து
கிஃப்ட்ஸ், அவ‌ளுக்கு வ‌ந்திருக்கானு பாருங்க‌. புரியுதா.;

Wednesday, March 25, 2009

ஹைக்கூ










காகிதத்தில் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்க்கிறான் என் காதலன் கையில் அவனின் கல்யாண பத்திரிக்கை.












காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.






மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை.


காதல்


காதலித்து பார் உன் கையெழுத்து அழகாகும்
கவிப்பேரரசு வைரமுத்து.

காத‌லிப்ப‌தை விட்டு பார் உன் த‌லையெழுத்து அழ‌காகும்
க‌ண்ண‌தாச‌ன்.


அழகும் கலரும் கண்களை கவரும் புன்னகை மட்டுமே இதயத்தை கவரும்.

so smile every time.

Thursday, March 19, 2009

கோடை டிப்ஸ்

1.பாதாம் பிஸின் சிறிது எடுத்து தண்ணீரில் ஊர வைக்க வேண்டும். நன்கு ஊறிய உடன் அதில் எலும்மிச்சை சேர்த்து பருகினால் உடல் குள்ர்ச்சி பெறும்.
2.வெந்தய கஞ்சி அடிக்கடி குடித்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெரும்.

3.கரிசலாங்கனி கீரை சாறு பிழிந்து தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி பெறும். கண்ணுக்கு பார்வை தெளிவு பெரும்.
4.எலும்மிச்சை சாறுடன் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு பெறும்.
5.கேட்ப கஞ்ஜோட மோர் சேர்த்து குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
6.தாகத்தை தணிக்க: எலும்மிச்சை இலை,துளசி இலை,முருங்கை பூ,புடலங்காய் பூ சாப்பிடலாம்.
7.மிகுதாகதாகம் தணிய: நன்னாரி வேர் காய்ச்சி குடிக்கவும்.

Saturday, March 14, 2009

கேள்வி பதில்?

அப்துல்கலாம் மேடையில பேசயில சொன்னார் இந்தியா இன்னும் ஒரு வருடத்துல வல்லரசு நாடாகும்னு எதுனால‌ சொன்னார்?
2.காந்தி செப்ப‌ல் அணிய‌ மாட்டார் ஏன்?

3.காந்திக்கு பிடிக்காத‌ பிஸ்க‌ட்?

நீங்க‌ள்லாம் அறிவாளிங்க‌தானே க‌ண்டுபிடிங்க‌

Sunday, March 8, 2009

நிலாப்பெண்


அழகான காவியம்; சித்திரமாய் தோன்றியவள்
சந்திரனாய் வாழ்பவள்
உனக்காகவே பிறந்து வாழ்கிறாள்;ஆம்
சுகமாய் உன்னை சுமக்கிறாள்
கறுவறையில் நீ கொடுக்கும் சுமைக்கூட‌
சுகம்தான் அவளுக்கு;
பொறுமையில் அமைதியான நிலா அவள்
உனக்காவே சுமைகளை தாங்கி கொண்டு
சுகங்களை தருகிறாள்;
குழந்தையாக உன்னை மகிழ்விப்பவள்
மனைவியாக உன்னை தாங்குகிறவள்
அன்னையாக‌ உன்னை சும‌ப்ப‌வ‌ள்
மொத்த‌தில்;அவ‌ள் உன‌க்காக‌வே
வெளிச்ச‌ம் த‌ரும் நிலாப்பெண்

Sunday, March 1, 2009

மனசு

சிலர் இறந்து போனால்

மனசு மறந்து போகும்.....!

ஆனால்...
சிலர் மற‌ந்து போனாலே

மனசு இறந்து போகும்.

Friday, February 27, 2009

நட்பு

அழகான நட்பு அன்பாய் தொட‌ர்கிறது
ஆர்பாட்டம் இன்றி ஆழமாய் செல்கிறது
விழிகள் சந்திகாத போதும்
விசயங்கள் பரிமாறப் படுகிறது
இந்த‌ ந‌ட்பு இனிதே தொட‌ற
இனறவ‌னிட‌ம் நீன்ட‌ துவா செய்கிறேன்