Thursday, April 30, 2009

ஹைக்கூநட்பு
உயிர்போகும் நேரத்திலும்
அவள் முகம் பார்த்து
உயிர் பிரிய வேண்டும்
என்று நினைக்கும் உறவு காதல்.
உயிர் போகும் போதும்
உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு.பார்வை
கருவறையில் நான் இருந்தவரை
வெளிச்சத்தை கண்டதில்லை.
பிறந்த பின்பும் நான் கருவறையில்தான் வாழ்கிறேன்.
நினைவு
நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்
நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்

பூக்கள்
பூக்களுக்கு ஒரு நாள்தான் ஆயுள்
ஆனால் அதையும் பரித்து
பூஜை செய்கிறான் மனிதன்
நூறு வருட ஆயுள் வேண்டி.
மெளனம்
ஒரு மனிதனை தாக்கு மிகப்பெரிய ஆயுதம்
அவனுக்கு பிடித்த ஒரு உறவின் மெளனம்

Saturday, April 25, 2009

தொடரும்


தெளிந்த நீரோடைதனில் தெரித்த பனித்துளியாய்
கண்கள் உனைக் கண்ட முதல்
அமைதி கடல்தனிலே அலைபோல நீயும் வந்தாய்;

உருவம் இல்லா உறவு இது
உன்னாலே உருவானது
திசையறியா பறவை
நான் கானும் திசையெல்லாம்
நீயாகி வந்து நின்றாய்;
கேள்வியோடு நின்றவன் நான்
பதிலை தந்தவள் நீ

காடு மலை பாராத காட்டாற்று வெள்ளமாய்
தடைகல் பல தாண்டி வந்தோம்
கல்வி நம்மை சேர்த்தது
கல்லூரி நம்மை பிரித்தது;

மங்கையான உன்னை
மனைவியாக வேண்டி யாசித்தேன்;
இரு மனதுடன் நீ யோசித்தாய்
காயங்களை எனக்குள் தந்துவிட்டு
அதற்க்கு மருந்தை சொல்லாமல் மலுப்பிவிட்டாய்

வலி பொறுக்க முடியாமல்
வஞ்சி உனைக்; கெஞ்சி நின்றேன்;
வாசற்படி வந்த என்னை
காசுக்கொடுத்து அனுப்ப சொன்னாய்

உணவுக்காக வந்தவன் இல்லை
உன் உறவுக்காக வந்தவன்
யாசிக்க வந்தவன் இல்லை
உன்னை நேசிக்க வந்தவன்

கனவுகளை நிஜமாக்கி
கற்பனைகளை விற்று
கவிதை வாங்குகிறேன்
உனக்காக பிறந்த வரிகள்
உன்னால் மட்டுமே வாழ்கிறது;
எழுத்துரிமை கொடுத்துவிட்டு
பதிப்புரிமை மறுத்ததேனோ

கடலில் விழுந்த எனக்கு
கட்டுமரம் தந்தாய்
வழி அறியாமல் விழிக்குறேன்
மீண்டும் திசை காட்ட மாட்டாயோ
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னை என்னி மட்டுமே வாழ்ந்திருப்பேன்.

Tuesday, April 21, 2009

எங்கே நீ


உன் நினைவுகளால்...
நிஜங்களை நினைத்து
நிலைமாறி தவிக்கிறேன்.

அணை இல்லா நெஞ்சத்தில்
ஆசைகள் எத்தனையோ!
துணையாக வந்துவிட
துணிந்து நின்றேன் உன்னோடு

கனவில் வந்தது போல்
என்னை கண்மூடி
உறங்கச்சொன்னாய்.

பெற்றவலுக்குத்தான் தெறியும்
பிள்ளையின் பாசம்.
கருக்கலைப்பு செய்துவிட்டு
பிள்ளை வரம் கேட்கிறாய்

காகிதத்தை கிழித்துவிட்டு
கவிதை வரிகள் கேட்கிறாய்.
விடை தெறியா வினாக்களுடன்
உனக்கே!உனக்காக!!

Thursday, April 16, 2009

கனவு


அலை அலையாய்
அத்தனையும் மலைபோல
உன்னிடத்தில்

வெண்ணிலவும்தான் மயங்கும்
பெண்ணவளின் கண்ணழகு;
கார்மேகம் என நினைத்து
மயில்கள் இங்கே
தோகை விரிக்கும்


பெண்ணே உன்
கருங்கூந்தல் அழகாலே!
புள்ளிமானும் துள்ளி வந்து
நடைபயிலும் உன்னிடத்தில்
எத்தனையோ!அத்தனையும்!
மொத்தமென உன்னிடத்தில்;

சித்திரமே உன் அழகு
சத்தியமே உன் சொல்லழகு
நித்திரையில் நீ இருந்தால்
அந்த நிஷப்தமும் ஓர் பேரழகு


சித்திரமாய் சிற்பி எந்தன்
கண்களிலே சரணடைந்தாய்
சிற்பமாய் வடிக்க என்னி
கரும்பாறை உடைத்தெறிந்தேன்


சித்திர கன்னி அவள்
சிறகடித்து பறக்க என்னி
நித்திரையில் இருந்த என்னை
இரக்கமின்றி விழிக்கச்செய்தாள்


நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?

Tuesday, April 7, 2009

கோபம் ஏன் தோழியே


நீ இங்கு நானாக


நான் இங்கு நீயாக


நிஜங்களை நினைத்து


நினைவுகளை வளர்த்தோம்.ஒவ்வொரு க‌ண‌மும்


ஒவ்வொரு நிக‌ழ்வு;


ப‌சித்த‌ பொழுதெல்லாம் _புசிக்க‌ச்செய்தாய்ப‌டிக்கும் நேர‌த்தில் _பாட‌ம் சொன்னாய்


நான் நிழ‌லாய் வ‌ந்த‌ பொழுது


என‌க்கு நிஜ‌மாய் நின்றாய்!


நேசிக்க தெறிந்தவள்


யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்


பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?


என்னுயிர் நட்பு மலரே!


நாம் மணம் வீசவேண்டும்


நீ மனம் மலர மாட்டாயோ...

Thursday, April 2, 2009

என்னவன் டையிரியிலிருந்து


நீ காற்று_நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்_ஆம்
உனக்கு பிடித்த வரிகள்;
நீ என்னிடம் அடிக்கடி சொல்லிய வரிகள்;
தென்றலாய் இருந்த என்னை சூறாவளியாய் சுற்ற வைத்தாய்
கடல் அலை நான் என்றேன்
கடற்கறை நீ என்றாய்
என் நினைவுகளும் நிஜங்களும் நீ என்றேன்
உன் நெஞ்சத்தின் நினைவுகல்
தடம் மாறி போனது ஏனோ?
என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
ஏனோ ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்கிறேன்
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே;
இப்படி எவ்வளவோ எனக்காக நீ சொன்னாய்
அத்தனையும் சுமந்தேன்_இறுதியில்
நீ என்னிடம் வந்து சொன்ன ஒரு செய்தி
அதை கேட்ட நான் அதிர்ந்தேன்_ஆம்
நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்
சம்மதம் சொல்லவா_என்ன இது
ஒரு உயிரை பலி கொடுக்கும் முன்
அதனிடம் உன் உயிரை எடிக்கவா என்று
கேட்பதுபோல் அல்லவா உள்ளது
என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்
ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
மணலில் எழுதிய வார்த்தைகள்
அலையின் பாசத்தால் அழிந்து போனதோ
விளையில்லா என் பாசத்தை
விற்பனை செய்து விட்டாய்
தலைமகன் தனியே;கலைமகள் எங்கே நீ?