Saturday, May 23, 2009

என்னைப்பற்றி


என் உயிரே... அபு...


அபுவின் நீண்ட நாள் சிறிய குழப்பம் இன்று தெளிவாகிவிடும் என்று நினைக்கிறேன்.
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் பெயர் நிஷா.இது என்னாங்க கேள்வி அப்போதைக்கு பெற்றோர் வைக்குற பெயர்தான்.எனக்கு என் பெயர் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பகல் வெங்காயம் கட் பன்னும்போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களுடைய முகம்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,பிடிக்காதது என் பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
இது என்னங்க கேள்வி நாணயம்னு சொன்னா பூவும் தலையும் இருக்கனும்,குடும்பம்னா கணவன் மனைவி பக்கத்தில் இருந்தால்தான் அழகு.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீல நிற சுடிதார்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மானிட்டரை பார்த்து டைப் பண்ணி கொண்டு, லட்சம் கனவுகள்(modthi vilayaadu)பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீல வர்ணமாக ஆசை.

14.பிடித்த மணம்?
மல்லிகை மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
1.இவர் ஒரு கவிஞன்.கவிதை மட்டுமே இவரின் உலகம்.இவரின் கவிதை அனைத்துமே அருமை.
2.இவரின் அனைத்து பதிவுகளும் எனக்கு பிடிக்கும்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அபுஅஃப்ஸர்... என் உயிரே...
இவரோட ஒவ்வொரு கவிதையிலும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உறவுகளை தேடும் விதம் அழகு.இவரின் படைப்பில் நான் ரசித்த என் மதிப்பிற்குறிய வழிகாட்டி இந்த தலைப்பின் அனைத்து வரிகளும் அவரின் கண்ணீர் துளிகல்.
சக்கரை_சுரேஷ்:
இவர பற்றி சொல்லனும்னா ரொம்ப நல்லவர் வல்லவர் சொல்லிகிட்டே போகலாம் ஆனால் இவர் அரசியலுக்கு போக வேண்டியவர்.

17. பிடித்த விளையாட்டு?
வீடியோ கேம்ஸ்

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நான் ரசித்த படம் சந்தோஷ் சுப்ரமணியம்.காதல் திரைபடம் காமெடி படம்.


20.கடைசியாகப் பார்த்த படம்?

அருந்ததி

21.பிடித்த பருவ காலம் எது?

பனிக்காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

குர்ஆன் (தர்ஜமா),அமல்களின் சிறப்புகள்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கணவனின் புகைப்படம் புதிதாக வரும்பொழுது (வாரம் ஒருமுறை).

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

என் கணவனுக்காக என் மொபைலில் இருந்துவரும் ரிங்டோன் முன்பே வா பாடல்(சில்லுனு ஒரு காதல்).

பிடிக்காத சத்தம்:இடியின் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

துபாய், மலேசியா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

மருதாணி விடுவேன்,சேலை டிசைனிங் பன்னுவேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வட்டி,புறம் பேசுவது,திருட்டு.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

டென்ஷன்,டென்ஷன்,டென்ஷன்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இந்தியாவில் மைசூர் பிருந்தாவனம்,ஊட்டி மலர்கண்காட்சி.வெளிநாடு துபாய் ஜுமைரா கடற்கரை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

கவலை ஒரு வியாதி அதனால் கவலை இல்லாம சந்தோஷமா இருக்கனும்.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இதுவரை இல்லை,இனியும் இல்லவே இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.

ஓவரா கலாய்க்காதீங்கப்பா

இதே கேள்விகளுக்கு தங்களுடைய பதிலை சொல்வதற்கு

1.புதியவன்.
2.பூர்ணி






211 comments:

«Oldest   ‹Older   201 – 211 of 211
rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

S.A. நவாஸுதீன் said...
\\
ஏன் தலைவா ஆபிஸ்ல புது படம் போடலையா?

இல்ல. முப்பது நாள் பார்த்ததுக்கு இன்னைக்கு சம்பளம் எடுத்துக்கிட்டும் மத்தவங்களுக்கு கொடுத்துக்கிட்டும் இருக்கேன்

\\
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அ.மு.செய்யது said...

அதுக்குள்ள‌ இவ்ளோ பின்னூட்ட‌ ம‌ழையா ??

நான் தான் லேட்டா ??

எளிமையான‌ ப‌தில்க‌ள்.உங்க‌ளைப் ப‌ற்றி தெரிந்து கொள்ள முடிந்த‌தில் ம‌கிழ்ச்சியே !!

SUFFIX said...

//இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.//

இதை நன்றாக புரிந்து, நடந்து கொன்டால்...இல்லை ப்ராப்லம்ஸ் அம்மனி. மிக முதிர்ச்சியான பதில்கள்.

rose said...

அ.மு.செய்யது said...
அதுக்குள்ள‌ இவ்ளோ பின்னூட்ட‌ ம‌ழையா ??

நான் தான் லேட்டா ??

எளிமையான‌ ப‌தில்க‌ள்.உங்க‌ளைப் ப‌ற்றி தெரிந்து கொள்ள முடிந்த‌தில் ம‌கிழ்ச்சியே !!

\\
வாங்க செய்யது என்ன ரொம்ப சீக்கரமா வந்தமாதிரி தெறியுது

rose said...

Shafi Blogs Here said...
//இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.//

இதை நன்றாக புரிந்து, நடந்து கொன்டால்...இல்லை ப்ராப்லம்ஸ் அம்மனி. மிக முதிர்ச்சியான பதில்கள்.

\\
நன்றி தங்கள் முதல் வருகைக்கு

SUFFIX said...

ஆமாம் இந்த ப்லாக் பட்டினத்திற்க்கு ரொம்ப புதியவன் தான். நவாஸ் தான் தனது 'மன விலாசத்தை' கொடுத்து அழைத்து வந்தார்..வந்து பார்த்தால்.. நம்ம அபூ அஃப்சர், ஹாயாக உயிரே...உயிரேன்னு உருகி உருகி கவி பாடிக்கொன்டு இருக்கின்றார், இந்த பக்கம் ஜமால் கற்ப்போம் வாங்கன்னு அன்பான் அழைப்பு, ஏதோ இவர்கள் ஊக்கத்துடன் வலைப்பூ தோட்டத்தில் ஒரு சிறு மொட்டாக நானும்....

SUFFIX said...

//இந்த பக்கம் முத்துப்பேட்டை இருக்குறதால முத்து முத்தாவும் வரும்//

என்ன தல நம்ம அதிரை உட்டுப்புட்டீயலே...அதிரையோட எஃபக்ட்ல பதில்கள் எல்லாம் சும்மா அதிருதில்ல!!

rose said...

Shafi Blogs Here said...
//இந்த பக்கம் முத்துப்பேட்டை இருக்குறதால முத்து முத்தாவும் வரும்//

என்ன தல நம்ம அதிரை உட்டுப்புட்டீயலே...அதிரையோட எஃபக்ட்ல பதில்கள் எல்லாம் சும்மா அதிருதில்ல!!

\\
அதிரைனா சும்மாவா சும்மா அதிரலங்க DTS எஃபக்டோட அதிருதுல நானும் கூவிக்குறேன்.

Poornima Saravana kumar said...

ஆஹா என்னா அருமையான பதில்!

//கடைசியாக அழுதது எப்பொழுது?
பகல் வெங்காயம் கட் பன்னும்போது//

:))

Poornima Saravana kumar said...

விரைவில் நானும் போட்டுத் தாக்கறேங்க...
ரெடியா இருங்க.

priyamudanprabu said...

//
பகல் வெங்காயம் கட் பன்னும்போது.
//
ஹ ஹா

«Oldest ‹Older   201 – 211 of 211   Newer› Newest»