Monday, March 30, 2009

படித்ததில் பிடித்தது

புவனாவை நினைத்து, ரவி கடுப்பானான்.
புவனா பேசியது அப்படி.
ஜாஸ்மின் செண்ட் பிடிக்குமில்ல..!இந்தா....ரவி ஆரம்பித்தான்.
ப்ச்.தலைவலிக்கும்ங்க. திருப்பிக் கொடுத்திடுங்க‌
பர்மா பஜார்ல ஷிபான் சாரி வாங்கினேன்...
ஜெயச்சந்திரன், சரவணாஸ் போனா, இந்த விலைக்கு, 10 சாரி வாங்கிடலாம், வேணாம்ங்க...
மாயாஜால்ல... இரண்டு டிக்கெட் புக் பண்ணிட்டேன்.போலாமா....
ச்சே..20 ரூபாய்க்கே,டி.வி.டி கிடைக்குதுல்ல‌...!300ரூபாய் வேஸ்ட்டா..
ர‌விக்கு தாங்காம‌ல் வெடித்தான்
ஏண்டி நொய் நொய்ங்க‌ற‌...காத‌லிச்சுதானே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்ட‌...!இப்ப‌ என்ன‌டி வ‌ந்துச்சு...?
புவ‌னா சிரித்தாள்.
என் அந்நாள் காத‌ல‌ரே..!க‌ல்யாண‌மாகி 20 வ‌ருஷ‌மாச்சு; வேல‌ண்டைன்ஸ் டே, ஆட்ட‌மெல்லாம் போதும். 18 வ‌ய‌சில‌, ஒரு பொண்ணும், இப்ப‌ நம‌க்கிருக்கா..!ஏதாவ‌து
கிஃப்ட்ஸ், அவ‌ளுக்கு வ‌ந்திருக்கானு பாருங்க‌. புரியுதா.;

Wednesday, March 25, 2009

ஹைக்கூ










காகிதத்தில் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்க்கிறான் என் காதலன் கையில் அவனின் கல்யாண பத்திரிக்கை.












காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.






மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை.


காதல்


காதலித்து பார் உன் கையெழுத்து அழகாகும்
கவிப்பேரரசு வைரமுத்து.

காத‌லிப்ப‌தை விட்டு பார் உன் த‌லையெழுத்து அழ‌காகும்
க‌ண்ண‌தாச‌ன்.


அழகும் கலரும் கண்களை கவரும் புன்னகை மட்டுமே இதயத்தை கவரும்.

so smile every time.

Thursday, March 19, 2009

கோடை டிப்ஸ்

1.பாதாம் பிஸின் சிறிது எடுத்து தண்ணீரில் ஊர வைக்க வேண்டும். நன்கு ஊறிய உடன் அதில் எலும்மிச்சை சேர்த்து பருகினால் உடல் குள்ர்ச்சி பெறும்.
2.வெந்தய கஞ்சி அடிக்கடி குடித்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெரும்.

3.கரிசலாங்கனி கீரை சாறு பிழிந்து தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி பெறும். கண்ணுக்கு பார்வை தெளிவு பெரும்.
4.எலும்மிச்சை சாறுடன் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு பெறும்.
5.கேட்ப கஞ்ஜோட மோர் சேர்த்து குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
6.தாகத்தை தணிக்க: எலும்மிச்சை இலை,துளசி இலை,முருங்கை பூ,புடலங்காய் பூ சாப்பிடலாம்.
7.மிகுதாகதாகம் தணிய: நன்னாரி வேர் காய்ச்சி குடிக்கவும்.

Saturday, March 14, 2009

கேள்வி பதில்?

அப்துல்கலாம் மேடையில பேசயில சொன்னார் இந்தியா இன்னும் ஒரு வருடத்துல வல்லரசு நாடாகும்னு எதுனால‌ சொன்னார்?
2.காந்தி செப்ப‌ல் அணிய‌ மாட்டார் ஏன்?

3.காந்திக்கு பிடிக்காத‌ பிஸ்க‌ட்?

நீங்க‌ள்லாம் அறிவாளிங்க‌தானே க‌ண்டுபிடிங்க‌

Sunday, March 8, 2009

நிலாப்பெண்


அழகான காவியம்; சித்திரமாய் தோன்றியவள்
சந்திரனாய் வாழ்பவள்
உனக்காகவே பிறந்து வாழ்கிறாள்;ஆம்
சுகமாய் உன்னை சுமக்கிறாள்
கறுவறையில் நீ கொடுக்கும் சுமைக்கூட‌
சுகம்தான் அவளுக்கு;
பொறுமையில் அமைதியான நிலா அவள்
உனக்காவே சுமைகளை தாங்கி கொண்டு
சுகங்களை தருகிறாள்;
குழந்தையாக உன்னை மகிழ்விப்பவள்
மனைவியாக உன்னை தாங்குகிறவள்
அன்னையாக‌ உன்னை சும‌ப்ப‌வ‌ள்
மொத்த‌தில்;அவ‌ள் உன‌க்காக‌வே
வெளிச்ச‌ம் த‌ரும் நிலாப்பெண்

Sunday, March 1, 2009

மனசு

சிலர் இறந்து போனால்

மனசு மறந்து போகும்.....!

ஆனால்...
சிலர் மற‌ந்து போனாலே

மனசு இறந்து போகும்.